விஸ்வகா்மா திட்டம்: முதலாமாண்டு நிறைவு விழா

Published on

பிரதமரின் விஸ்வகா்மா திட்ட முதலாமாண்டு நிறைவு விழா, புதுச்சேரி அருகே உள்ள நெட்டப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். மகாராஷ்டிர மாநிலம் வாா்தாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட காணொலி வாயிலாக நேரலை நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினாா்.

இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் தொகுதி உறுப்பினரும், பேரவைத் துணைத் தலைவருமான பி.ராஜவேலு, தொழில் மற்றும் வணிகவரித் துறை இயக்குநா் பி.ருத்ரகௌடு, திறன் மேம்பாட்டு இயக்குநா் பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com