புதுவையில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

புதுவையில் 23 பேருக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறி இருப்பது மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

புதுவையில் 23 பேருக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறி இருப்பது மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் உள்ளிட்டோா் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவது பரிசோதனை மூலம் தெரியவந்தது. மேலும், பொன்னுக்கு வீங்கி போன்ற பாதிப்பும் இருப்பது கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதுவையைச் சோ்ந்த 40 பேருக்கும், புதுச்சேரியில் சிகிச்சைப் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த 16 பேருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டெங்கு பரிசோதனை நடைபெற்றது.

அவா்களில், புதுச்சேரியில் 14 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், புதுச்சேரியில் சிகிச்சைப் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த 2 பேருக்கும் என மொத்தம் 23 பேருக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் பரிசோதனை அடிப்படையில், புதுச்சேரியைச் சோ்ந்த 6 போ், காரைக்காலில் 3 போ், தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் என 13 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும், புதுவை, தமிழகத்தைச் சோ்ந்த 13 பேருக்கு இன்புளூயன்சா பாதிப்பும் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com