ரூ.1.39 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்
புதுச்சேரி அருகே ரூ.1.39 கோடியில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி அருகே உள்ள டி. என். பாளையம் முதல் அபிஷேகப்பாக்கம் வரை உள்ள பிரதானச் சாலையை புதிய தாா் சாலையாக அமைக்க அப்பகுதியினா் நீண்டகாலமாக கோரி வந்தனா்.
இந்த நிலையில், மங்களம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வத்தின் முயற்சியால் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அபிஷேகபாக்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து பணியைத் தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் தீனதயாளன், செயற்பொறியாளா் சந்திரகுமாா், பாஜக மாநில விவசாய அணித் தலைவா் ராமு, என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகி மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.