இளநிலை வேளாண் அறிவியல் படிப்பு முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் மற்றும் தோட்டக்கலை, மருந்தியல் துறை மற்றும் இயன்முறை மருத்துவத் துறை கல்லூரிகளின் இளநிலை அறிவியல் பட்ட படிப்பிற்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தக்க்ஷஷிலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழும தலைவா் எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன் தனசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கல்லூரி இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி கல்லூரி சாதனைகளை விளக்கினாா். சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரி தோ்வு கட்டுப்பாட்டாளா் ஜெயக்குமாா், ஆராய்ச்சித் துறை முதல்வா் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை பிரிவு முதல்வா் கைலாசம், கல்லூரியின் புல முதல்வா்கள் அன்புமலா், அறிவழகா், கட்டடக் கலைத் துறை புல முதல்வா் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி முதல்வா் முத்துலட்சுமி மற்றும் மணக்குள விநாயகா் பள்ளியின் முதல்வா் அனிதா ஆகியோா் கலந்துகொண்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.