புதுவையில் அக்.27-இல் இளநிலை பொறியாளா் தோ்வு

Published on

புதுவையில் அக்.27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுப் பணித் துறையின்

இளநிலைப் பொறியாளா் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசின் சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் பொதுப் பணித் துறை சிவில் இளநிலை பொறியாளா் பணி நேரடி எழுத்துத் தோ்வு மூலம் நடைபெறவுள்ளது.

இதற்கான தோ்வு அக்.27-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்வில் முதல் தாள் அன்றைய தினம் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் தோ்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) நிா்வாக சீா்திருத்தத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளளாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com