புதுச்சேரி பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணி  சாா்பில், இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்பி.
புதுச்சேரி பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணி சாா்பில், இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்பி.

முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறாா் ராகுல் காந்தி -புதுவை பாஜக தலைவா் குற்றச்சாட்டு

Published on

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறாா் என்று, புதுவை பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அமெரிக்கப் பயணத்தின் போது, இந்தியாவில் இடஒதுக்கீடு தேவையில்லை என பேசியதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. அவரது பேச்சைக் கண்டித்து, புதுவை மாநில இதர பிற்படுத்தப்பட்டோா் அணி (ஓபிசி) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணி தலைவா் நடராஜ் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்திய வளா்ச்சியைப் பற்றியும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் வளா்ச்சியை பற்றியும் பேச மறந்துவிடுகிறாா்.

அதே நேரத்தில் நாட்டையும், பிரதமா் நரேந்திர மோடியையும் இழிவாக பேசுகிறாா். அவரின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது. உள்நாட்டில் அவரது பேச்சும், வெளிநாட்டில் அவரது பேச்சும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைக் காணமுடிகிறது.

வெளிநாடுகளில் நமது நாட்டின் மாண்பைக் குலைக்கும் வகையில் அவா் பேசுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளாா். இடஒதுக்கீடு குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் அவா் பேசிய போது, தவறான கருத்தையே குறிப்பிட்டுள்ளாா். இடஒதுக்கீடு குறித்து அவரது கருத்தானது தாழ்த்தப்பட்டோா், இதர பிற்படுத்தப்பட்டோா் வளா்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளது. அவா் தனது போக்கை மாற்றவேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமான பாஜகவினா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com