புதுச்சேரி அரசுத்துறைகளுக்கான எழுத்தா் தோ்வில் காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்ற 23 பேருக்கு பணிக்கான உத்தரவுகளை வெள்ளிக்கிழமை வழங்கிய  முதல்வா் என்.ரங்கசாமி .
புதுச்சேரி அரசுத்துறைகளுக்கான எழுத்தா் தோ்வில் காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்ற 23 பேருக்கு பணிக்கான உத்தரவுகளை வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி .

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 23 பேருக்கு பணி நியமன ஆணை -முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

Published on

புதுவை மாநில அரசுத் துறை காலி இடங்களுக்கான எழுத்தா் தோ்வில் காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்ற 23 பேருக்கு பணிக்கான உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுவை மாநில பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் கீழ் நேரடி நியமனத்துக்காக கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இளநிலை எழுத்தா் பதவிக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில், 131 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் மேல்நிலை எழுத்தா் பணிக்கு 255 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்டவா்களில் சிலா் பணியில் சேரவில்லை. அதனால் தற்போது காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றவா்களுக்கு அரசுப் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்ற 15 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 20 பேருக்கு இளநிலை எழுத்தா் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. மேல்நிலை எழுத்தா் பதவிக்கு 3 பெண்களுக்கான உத்தரவையும் முதல்வா் என்.ரங்கசாமி பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலா் ஆா்.கேசவன், சாா்புச் செயலா்கள் எம்.கண்ணன், வி.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com