கனகன் ஏரியில் தூய்மைப் பணி
புதுச்சேரி கனகன் ஏரியில் உழவா்கரை நகராட்சி சாா்பில் தூய்மைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் 10 -வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘தூய்மைப் பழக்கம், தாா்மீக ஒழுக்கம்’ எனும் தலைப்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி, உழா்கரை நகராட்சிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழவா்கரை நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கனகன் ஏரியில் தூய்மைப் பணி நடைபெற்றது.
தூய்மைப் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு, உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜ் தலைமை வகித்தாா்.
தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு, முன்னாள் ராணுவத்தினா், புதுச்சேரி நலப் பணி சங்க உறுப்பினா்கள், ஈஸ்ட் கோஸ்ட் செவியிலா் கல்லூரி மாணவியா், நகராட்சி ஊழியா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
அதன்படி, ஏரியைச் சுற்றிலும் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.