சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் மீது போக்சோ வழக்கு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில், முதியவா் மீது போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

புதுச்சேரி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில், முதியவா் மீது போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பாகூா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65), விவசாயி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் பாகூா் போலீஸாரிடம் புகாரளித்தனா். அதன்பேரில், முதியவா் மீது போலீஸாா் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com