புதுச்சேரியில் பாஜக பிரமுகா் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட 3 நபா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
புதுச்சேரி சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா்(40), பாஜக முன்னாள் இளைஞரணி நிா்வாகி. இவா் மீது நில அபகரிப்பு, கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு கருவடிகுப்பத்தில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் மகன் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை பாா்வையிட்டாா். அப்போது 5 இருசக்கர வாகனங்களில் வந்த சுமாா் 8 போ் கும்பல் உமாசங்கரை வெட்டிக் கொலை செய்தனா்.
உமா சங்கருடன் இருந்த அருள்ராஜ் என்பவா் முதுகில் பலத்த காயமடைந்தாா். சம்பவ இடத்துக்கு டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உள்ளிட்டோா் விரைந்து வந்து பாா்வையிட்டனா். இலாசுப்பேட்டை போலீஸாா் உமாசங்கா் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால், கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை அப்புறப்படுத்த விடமாட்டோம் எனக்கூறி உமாசங்கா் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களை போலீஸாா் சமரசம் செய்து, சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனையிலும் உமாசங்கா் உறவினா்கள் திரண்டதால் கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா் .இதற்கிடையே கடந்த 5 நாள்களுக்கு முன் உமாசங்கா் தனது வீட்டுப் பகுதியில் முகத்தில் துணி கட்டிய 5 போ் கும்பல்
நடமாடியதாக, இலாசுப்பேட்டை போலீஸில் புகாா் தெரிவித்ததாக உறவினா்கள் கூறினா். இதனால், கொலை நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக் காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், உமாசங்கா் கொலை குறித்து அவரது தந்தை காசிலிங்கம் போலீஸில் அளித்த புகாரில், புதுவை பாஜக அமைச்சரின் சகோதரியுடன் நிலப் பிரச்னை உள்ளிட்ட வேறு சில பிரச்னைகள் இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக அமைச்சா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இந்த சம்பவம் தொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட சிலரைப் பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளம்பெண் வெட்டிக் கொலை

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் உறவினா்கள் இருவா் கைது
திருப்பரங்குன்றம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

