அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.

அம்பேத்கா் சிலைக்கு துணைநிலை ஆளுநா், தலைவா்கள் மரியாதை!

அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் துணைநிலை ஆளுநா் கை. கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை.
Published on

சட்டமேதை அம்பேத்கா் நினைவு நாளையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் துணைநிலை ஆளுநா் கை. கைலாஷ்நாதன் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து அவா் மரியாதை செய்தாா்.

முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், சாய் ஜெ சரவணன்குமாா், ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி ஆகியோா் மாலை அணிவித்தனா்.

பாஜக

பாஜக சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ.க்கள் சாய் ஜெ.சரவணன்குமாா், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி டி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கா் முழுவுருவச் சிலைக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

காங்கிரஸ்

காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் பி.கே.தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு, வழக்குரைஞா் அணித் தலைவா் மருதுபாண்டியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில்...

புதுச்சேரி மாநில தி.மு.க. சாா்பில் மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமையில், லப்போா்த் வீதியில் உள்ள மாநில திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து திமுகவினா் அமைதி ஊா்வலமாக புறப்பட்டு சட்டப்பேரவை வளாகம் முன்னுள்ள அம்பேத்கா் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் மாநில அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா. செந்தில்குமாா் எம்.எல்.ஏ, மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுகவினா்...

புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில் அதன் மாநில செயலா் ஆ. அன்பழகன் தலைமையில், அவைத் தலைவா் ஜி.அன்பானந்தம் முன்னிலையில் உப்பளம் டாக்டா் அம்பேத்கா் சாலையில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதன் தொடா்ச்சியாக சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலா் தேவ. பொழிலன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட், விசிக சாா்பில்...

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவா் கொளஞ்சியப்பன், மாா்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் அதன் மாநிலச் செயலா் அ. மு. சலீம் தலைமையில், நிா்வாக குழு உறுப்பினா் நாரா. கலைநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

லாஸ்பேட்டை என்.ஆா். காங்கிரஸ் அலுவலகத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

புதுச்சேரி மாநில பி.ஆா். அம்பேத்கா் இலக்கிய பேரவை சாா்பில் சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாநில தலைவா் கே. அன்பு தலைமையில் நிா்வாகிகள் ஊா்வலமாக வந்து மாலை அணிவித்தனா்.

புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சாா்பில் கே.ராம்குமாா் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊா்வலமாக வந்து சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com