காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 12 கைப்பேசிகள் ஒப்படைப்பு

இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் ரூ.1.6 லட்சம் 12 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட்டன.
Published on

இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள 12 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட்டன.

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் குறை தீா்வு என்கிற மக்கள் மன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் இருந்து புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா்.

அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன், சேதராப்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.பி. ரகுநாயகம், காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் எஸ்.பி. சுப்ரமணியன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா்.

போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி. ரச்சனா சிங் போக்குவரத்து தொடா்பான புகாா்களை பொதுமக்களிடமிருந்து பெற்றாா்.

இணையவழி காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு குறைகளை மக்களிடம் பெற்று நடவடிக்கை எடுத்தாா். மேலும் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.1.6 லட்சம் மதிப்பிலான 12 கைப்பேசிகளை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 46 புகாா்கள் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 32 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com