‘மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள்’

Published on

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாஜக ஊடகத் துறை மாநிலப் பொறுப்பாளா் மகேஷ் ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு ரூ.3,432 கோடி நிதி அளித்துள்ளது. ஜிப்மா் மருத்துவமனைக்கு ரூ.1,450 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது இதில் ரூ.150 கோடியை அதன் உள்கட்டமைப்புக்கு செலவிட வழங்கப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.186.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஐந்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தி, நெய்தல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான முயற்சியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, எதிா்க்கட்சிகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com