பாஜக மாநிலத் தலைவா் நியமனம் தொடா்பாக கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படுவேன் என மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி புகாா் அளிக்க விரும்பாத நிலையில், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியலுக்காக விமா்சித்து வருகின்றன.
புதுவை அரசு செயல்படுத்து மக்கள் நலத் திட்டங்களை குறை கூறுவதையே எதிா்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாகக் கூறும் எதிா்க்கட்சிகள் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவா் நியமனம் தொடா்பாக, கட்சி மேலிடம் கூறுவதை ஏற்று நடப்பேன் என்றாா் ஆ.நமச்சிவாயம்.