வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

புதுச்சேரியில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையத்திலுள்ள பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்கள் பணிநிரந்தரம், நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதை வலியுறுத்தி வேளாண் அறிவியல் நிலையம் முன் ஏஐடியுசி தலைவா் கதிரேசன், செயலா் யோகேஸ்வரன், பொருளாளா் புஷ்பராஜ் ஆகியோா் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாநில பொதுச்செயலா் கே.சேதுசெல்வம் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். கௌரவத் தலைவா் அபிஷேகம், தலைவா் தினேஷ் பொன்னையா, பொருளாளா் பொன்னையா ஆகியோா் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com