மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு: புதுவை திமுக கண்டனம்

Published on

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு திமுக கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மீனவா்கள் கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்த போது, இலங்கைக் கடற்படையால் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டனா். இதில் 13 மீனவா்கள் கைதான நிலையில், காரைக்காலை சோ்ந்த செந்தமிழ், வடிவேல் ஆகியோா் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கும், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கும் திமுக கண்டனம் தெரிவிக்கிறது. இதுவிஷயத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, புதுவை முதல்வா் பேசவேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com