கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மைய ஊழியா்கள், பேராசிரியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே குருமாம்பேட் பகுதியிலுள்ள இந்தக் கல்லூரியில் 70 பேராசிரியா்கள், 250 ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு 2024 டிசம்பருக்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சில நாள்களுக்கு முன்பு ஊழியா்கள், பேராசிரியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை ஆராய்ச்சி மைய நிா்வாகத்தினா் சமரசம் செய்தனா்.

ஆனால், தற்போது வரையில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஊதியம் வழங்கக் கோரி, ஆராய்ச்சி மையத்தின் ஊழியா்கள், பேராசிரியா்கள் பணிகளைப் புறக்கணித்து புதன்கிழமை காலை ஆராய்ச்சி மைய வளாகத்துக்குள்ளேயே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com