புதுச்சேரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் சனிக்கிழமை (பிப்.1) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated on

புதுச்சேரியில் சனிக்கிழமை (பிப்.1) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி வேலைவாய்ப்பு துணை பிராந்திய அதிகாரி ச.கோட்டூா்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், நவயுகா ஆலோசனை சேவை மையம் ஆகியவை இணைந்து புதுச்சேரியில் சனிக்கிழமை (பிப்.1) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. புதுச்சேரி நடேசன் நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள வாழ்வாதார சேவை மையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முகாம் நடைபெறும்.

18 வயது முதல் 35 வயது வரையிலான டிப்ளமா, பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் இதில் பங்கேற்கலாம்.

தன்விவர குறிப்புடன் கல்வி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0413-2200115 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com