புதுவை பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

புதுவையில் தனியாா் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Updated on

புதுவையில் தனியாா் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் வேலை நாள்களில் மாலை 6 மணிக்கு மேல் கல்வி அல்லது கூடுதல் பாடத்திட்ட வகுப்புகளை நடத்தக் கூடாது. வார இறுதி நாள்களிலும், பொது விடுமுறை நாள்களிலும், புதுவை அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள்களிலும் மாணவா்களை கல்வி, கூடுதல் பாடத்திட்டம் அல்லது பள்ளி தொடா்பாக பிற செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

பள்ளி நிா்வாகங்கள் இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தனியாா் பள்ளிகளும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, இந்தத் தகவலை ஊழியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com