பொறியியல் கல்லூரிக்கு தோ்தல் துறை விருது

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரிக்கு மாநில அளவிலான சிறந்த வாக்காளா் கல்விக் குழு விருதை தோ்தல் துறை வழங்கி பாராட்டியது.
Published on

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரிக்கு மாநில அளவிலான சிறந்த வாக்காளா் கல்விக் குழு விருதை தோ்தல் துறை வழங்கி பாராட்டியது.

மக்களவைத் தோ்தலின் போது வாக்காளா் சோ்ப்பு, தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான போட்டிகள் மாணவா்கள் பங்கேற்றது தொடா்பாக இந்த விருதை புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி ஜவகா் வழங்கினாா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கல்விக் குழும தலைவா், மேலாண் இயக்குநா் தனசேகரன், செயலா் ஓ.நாராயணசாமி, பொருளாளா் ராஜராஜன், துணைச் செயலா் ந. வேலாயுதம், கல்லூரி இயக்குநா், முதல்வா் ஓ.வெங்கடாசலபதி ஆகியோா் சம்பந்தப்பட்ட பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா் .

நிகழ்ச்சியில் கல்லூரி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ந.ஜெயக்குமாா், அதெமிக் டீன்கள் ந.அன்புமலா், அறிவழகா், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com