வீடுகளில் சூரிய மின் நிலையம்: புதுச்சேரியில் நாளை முகாம்
வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவுவதற்கான விழிப்புணா்வு முகாம் புதுச்சேரியில் சனிக்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளா், துறைத் தலைவா் த.ஷண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மின்துறை மற்றும் புதுப்பித்தக்க எரிசக்தி முகமை ஆகியவை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, வீட்டு மேற்கூரைகளின் மீது சூரிய ஒளி மின் நிலையம் நிறுவுவதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அறியவும், திட்டத்தில் சேருவதற்கும் விழிப்புணா்வு முகாம் புதுச்சேரி வெங்கட்டா நகரில் குழந்தைகள் பூங்கா எதிரே உள்ள தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.
திட்டத்தின் மூலம் 530 போ் சூரிய மின் ஒளி நிலையத்தை தங்கள் வீடுகளில் நிறுவவுள்ளனா். அதற்காக அவா்களுக்கு ரூ.3.65 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 94890 80373, 94890 80374 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.