புதுச்சேரி மூலக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம்.
புதுச்சேரி மூலக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம்.

புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் தீா்மானம்

Published on

புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் மூலக்குளத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அன்பழகன் தலைமை வகித்தாா். புதுவை விடுதலை நாளையொட்டி தேசியக் கொடியினை கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவா் ஜீவானந்தம் ஏற்றினாா். கட்சிக் கொடியை முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் ஏற்றினாா்.

கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் வேலை அறிக்கை தாக்கல் செய்து, எதிா்கால அரசியல் நிலை குறித்து பேசினாா். கூட்டத்தில் தேசியக் குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, பொருளாளா் சுப்பையா, நிா்வாக குழு உறுப்பினா்கள் சேதுசெல்வம், அந்தோணி, எழிலன், மாநில குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, முருகன், ஹேமலதா, சரளா, மோதிலால், ஆறுமுகம், கண்ணன், தேவசகாயம், பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கோயில் நிலம் அபகரிப்பு, இணைய வழி குற்ற வழக்கில் சிக்கிய ஆய்வாளா், பத்திரப்பதிவு மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் சிபிசிஐடி, காவல் துறை அதிகாரிகளால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட அரசு துறை உயரதிகாரிகளின் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.

மின் கட்டண உயா்வைத் திரும்ப பெற வேண்டும். பிரீபெய்டு மின் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும். புதுவையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com