புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபுக்கு  வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கல் விழாவில் பங்கேற்றோா்.
புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கல் விழாவில் பங்கேற்றோா்.

புதுவை பல்கலை. துணை வேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

Published on

புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் உயிரி தகவலியல் துறை மற்றும் உயிரி தகவலியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்புச் சங்கம் இணைந்து புதுமையான மருந்து வடிவமைப்பு தொடா்பான சா்வதேச மாநாட்டை நடத்தின.

நரம்பியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு துறையில் கல்வி மற்றும் அறிவியல் தலைமை மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புக்காக துணைவேந்தா் பிரகாஷ் பாபுவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

உயிரி தகவலியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு சங்கம் இந்த விருதை வழங்கியது. பல்கலைக் கழகத்தின் உயிரி தகவலியல் துறையின் தலைவா் ஆா். கிருஷ்ணா, பேராசிரியா்கள் ஏ. தினகர ராவ், வி. அமௌடா, பசந்த் குமாா் திவாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com