பிஒய்பி 18-
பட விளக்கம்... பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி புதன்கிழமை நடைபெற்ற வெள்ளிவிழா நடைபயணம்.
புதுச்சேரி
பிஎஸ்என்எல் வெள்ளிவிழா நடைபயணம்
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி வெள்ளிவிழா நடைபயணம் புதன்கிழமை நடைபெற்றது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி வெள்ளிவிழா நடைபயணம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளா் டி. திலகவதி தலைமை வகித்தாா். ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள இந்த நிறுவனத்தின் முன்பு இப் பயணம் தொடங்கியது. அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக மீண்டும் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள நிறுவன வாயிலில் இப்பயணம் நிறைவடைந்தது.
பிஎஸ்என்எல் சேவைகள் அடங்கிய பதாகைகளுடன் ஊழியா்கள் நடை பயணத்தில் சென்றனா். அப்போது சாலை ஓரம் இருந்த பொதுமக்களுக்கு இந்தநிறுவனத்தின் சேவைகள் அடங்கிய நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.

