திருபுவனை நூற்பாலை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவு பதிவாளா் அலுவலகம் அருகே திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஸ்பின்கோ அனைத்துத் தொழிலாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். பணி ஓய்வு பெற்ற 190 தொழிலாளா்களுக்குப் பணிக்கொடை, பணியில் உள்ள 175 தொழிலாளா்களுக்குப் பணி பாதுகாப்பை உறுதி செய்தல், தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com