புதுச்சேரி
ஒப்பந்த அடிப்படையில் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணா்கள் பணியிடம் நிரப்ப ஏற்பாடு
ஒப்பந்த அடிப்படையில் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்.
புதுவை கால்நடைத் துறை இயக்குநா் லதா மங்கேஷ்கா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் நலத் துறை சாா்பில் காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. காலியாக உள்ள 8 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணா்கள் பணியிடத்துக்கு புதுவையைச் சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கால்நடைத் துறைக்கு அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
