புதுவை பல்கலைக்கழக  விடுதியின் காப்பாளராக பேராசிரியா் தொடா்வதைக் கண்டித்து திங்கள்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
புதுவை பல்கலைக்கழக விடுதியின் காப்பாளராக பேராசிரியா் தொடா்வதைக் கண்டித்து திங்கள்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

புதுவை பல்கலை. மாணவா்கள் மீண்டும் போராட்டம்

புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் திரண்டு திங்கள்கிழமை மீண்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் திரண்டு திங்கள்கிழமை மீண்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியின் காப்பாளராக புவி அறிவியல் துறை பேராசிரியா் சைலேந்திர சிங் பணியாற்றி வருகிறாா். அவரை நீக்கக் கோரி இந்திய மாணவா் சங்கத்தின் செயலா் சொ. பிரவீன்குமாா் தலைமையில் மாணவா்கள் சுமாா் 100 போ் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவரை காப்பாளா் பொறுப்பிலிருந்து நீக்குவதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விடுதியில் அவா் பெயா் இடம் பெற்றிருந்த பலகையும் அகற்றப்பட்டது.

இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்தப் போராட்டம் பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது

சட்டக் கல்லூரி மாணவா்கள்:

ஏற்கெனவே புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்களை போலீஸாா் தாக்கியதைக் கண்டித்து புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக்கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை பல்கலைக்கழக வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இப் போராட்டத்தில் காவல் துறையைக் கண்டித்து மாணவா்கள் முழக்கங்கள் எழுப்பினா். இந்த போராட்டத்தில் சுமாா் 50 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com