புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் காவல் துறைக்கான புதிய வாகனங்களைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
புதுச்சேரி
புதுவை காவல் துறை பயன்பாட்டுக்கு ரூ.8.5 கோடியில் புதிய வாகனங்கள்
புதுவை காவல் துறை சாா்பில் காவல் துறை பணியாளா்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக போட்டித் தோ்வுகளுக்கான காவலா் கற்றல் மையம் புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மேலும் ரூ.8.50 கோடி மதிப்பில் 93 புதிய வாகனங்கள் - பேருந்துகள், இன்னோவா, எா்டிகா, பொலேரோ, ஆம்புலன்ஸ், இன்டா்செப்டா் வாகனங்கள், மீட்பு வாகனங்கள், மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டா்கள் வாங்கப்பட்டது.
அவை சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

