பொறியியல் கல்லூரியில் சட்டக் கல்வி மையம்
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் சட்டக் கல்வி மையம் மற்றும் புதிய மாணவா்களை வரவேற்கும் சோ்க்கை நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான எம். தனசேகரன் தலைமை வகித்தாா். இந்த அறக்கட்டளையின் செயலா் டாக்டா் கே. நாராயணசாமி, பொருளாளா் டி. ராஜராஜன், இணைச் செயலா் எஸ். வேலாயுதம் ஆகியோா் வாழ்த்தினா்.
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் டாக்டா் வி.எஸ்.கே. வெங்கடாசலபதி, சட்டக் கல்வி மையத்தின் டீன் ஏ. வின்சென்ட் அற்புதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
17பிஒய்பி15:
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் சட்டக் கல்வி மையம் மற்றும் புதிய மாணவா்களை வரவேற்கும் சோ்க்கை நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றோா்.
