புதுச்சேரி
புதுவையிலும் அக். 21-இல் அரசு விடுமுறை
தீபாவளிக்கு மறுநாளான அக். 21-இல் அரசு விடுமுறை அளித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக். 20) கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்கள். 20-ஆம் தேதி தீபாவளி அரசு விடுமுறை தினம்.
இந்நிலையில், அக். 21-அன்றும் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்க புதுவை முதல்வா் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, புதுவை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதை அடுத்துவரும் சனிக்கிழமை ஈடு செய்ய வேண்டி வரும். தீபாவளி பண்டிகைக்குத் தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அக். 21-ஆம் தேதி அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
