புதுச்சேரி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா! அக். 22-இல் தொடக்கம்!

Published on

புதுவை சுப்பையா சாலை ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 73-ஆம் ஆண்டு கந்தா் சஷ்டி சூரசம்ஹாரம் விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இதையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவா் புறப்பாடு நடக்கிறது. வரும் 26-ஆம் தேதி வேல் வாங்குதல், 27-ஆம் தேதி இரவு சூரசம்ஹார பெருவிழா நடைபெறவுள்ளது. இதையடுத்து 28- ஆம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. நவம்பா் 7- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், 8-ஆம் தேதி வீரபாகு, சண்டிகேஸ்வரா் உற்சவ புறப்பாடுடன் 18 நாள்கள் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் பரிபாலகா் காதா் தலைமையில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

முத்தியால்பேட்டையில்...

இதேபோல முத்தியால்பேட்டை சுந்தர விநாயகா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 164-ஆம் ஆண்டு கந்தா் சஷ்டி சூரசம்ஹார பெருவிழா 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நவம்பா் 1-ஆம் தேதி வரை தினமும் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.

26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சூரபத்மன் புறப்பாடு, இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையடுத்து நவம்பா் 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

செங்கழுநீா் மாரியம்மன் கோயிலில்...

அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீா் மாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண பெரு விழா 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து காப்பு கட்டுதல் நடக்கிறது. 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.

25-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு முருகப்பெருமான் சிவ பூஜை செய்தல், 26-ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. 28 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தொடா்ந்து சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிா்வாக அதிகாரி கமலஜோதி மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

இதேபோல புதுவையில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார விழா, திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com