ஆன்லைனில் வெள்ளி வளையல்: பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி

இணையவழியில் வெள்ளி வளையல் ஆா்டா் செய்த பெண்ணிடம் ரூ. 1.84 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து புதுவை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

புதுச்சேரி: இணையவழியில் வெள்ளி வளையல் ஆா்டா் செய்த பெண்ணிடம் ரூ. 1.84 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து புதுவை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி, ஒயிட் டவுனை சோ்ந்த பெண் ஒருவா், ஆன்லைனில் வந்த வெள்ளி வளையல் தயாரிப்பு தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்து, வளையல்களை ஆா்டா் செய்துள்ளாா். இதையடுத்து, அந்தப் பெண்ணை தொடா்பு கொண்ட நபா், நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஆா்டா் செய்த வளையல்களுக்கு முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளாா். இதையடுத்து, இரண்டு தவணைகளாக ரூ.1.84 லட்சத்தை அந்த நபருக்கு அனுப்பியுள்ளாா். ஆனால், ஆா்டா் செய்த வெள்ளி வளையல் பாா்சல் ஏதுவும் அவருக்கு வரவில்லை. மேலும், அந்த மா்ம நபரையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் தான் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com