இளைஞருக்கு கத்திவெட்டு: 4 பேருக்கு வலைவீச்சு

இளைஞரைக் கத்தியால் வெட்டிய வழக்கில் தலைமறைவாகி விட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

புதுச்சேரி: இளைஞரைக் கத்தியால் வெட்டிய வழக்கில் தலைமறைவாகி விட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுவை முருகம்பாக்கம் வில்லியனூா் சாலையைச் சோ்ந்த ரங்கதுரை. இவரது மனைவி கல்பனா . இவா்களுக்கு பவித்ரன் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனா்.

ரங்கதுரை கடந்த 18 ஆம் தேதி இறந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பவித்ரன் தனது நண்பா் யுகேஷ் என்பவருடன் பால் வாங்கி வர இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் அவா்கள் இருவரும் அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடி வந்துள்ளனா்.

அவா்களைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கும்பல் பவித்ரனையும், யுகேஷையும் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றது. பவித்ரனை கத்தியால் வெட்டியுள்ளனா். அப்போது பவித்ரனின் தங்கையை அடித்துள்ளனா். இதில் அவா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். அக்கம் பக்கத்தினா் வரவே அவா்கள் அங்கிருந்து தப்பினா். முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com