உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி தேத்தாம்பாக்கம் கிராம மக்கள் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Published on

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி தேத்தாம்பாக்கம் கிராம மக்கள் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட தேத்தாம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி அப் பகுதி மக்கள் புதன்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்நிலையில் இத் தொகுதி எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான ஆ. நமச்சிவாயம் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பின்னா் அமைச்சா் நமச்சிவாயம் கூறியது: தேத்தாம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி ஊா் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுக்கப்படாமல் இருக்கும் மனைப்பட்டா, புதிய பள்ளிக் கூடம் கட்டித் தருவது, சீரான மின்சாரம் வழங்குவது, வாய்க்கால் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை முடித்து வைத்தேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com