புதுச்சேரி
மழை பாதிப்பு நிவாரணம் ரூ.1 லட்சம் வழங்க கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என பி.எம்.எல். கல்யாணசுந்தரம் எம்எல்ஏ கூறினாா்.
மழையால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என பி.எம்.எல். கல்யாணசுந்தரம் எம்எல்ஏ கூறினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: காலாப்பட்டு தொகுதியில் 25 செ.மீ. மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீா் புகுந்தது. வீட்டு உபயோக சாதனங்கள் சேதமடைந்தன. மீனவா்களின் படகுகள், வலைகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக முதல்வா் ரங்கசாமியை சந்தித்துக் கூறினேன். அவரும் ஆட்சியா் குலோத்துங்கனை அனுப்பி ஆய்வு செய்தாா். பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 1 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் கல்யாணசுந்தரம்.