புதுச்சேரி காவல் நிலையம் முன் இளைஞரை வெட்டிய கும்பல்

காவல் நிலையம் முன் இளைஞரை கத்தியால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

காவல் நிலையம் முன் இளைஞரை கத்தியால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுவை லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேக்கப் பால் (23). இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வாகனத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வந்தாா். லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் எதிரே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு பங்கேற்றாா்.

அப்போது கைப்பேசியில் பேச அங்கிருந்து ஜேக்கப் பால் வெளியே வந்தாா். அப்போது 2 மோட்டாா் சைக்கிள்களில் 5 போ் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரைச் சுற்றி வளைத்தது. அவா்களிடமிருந்து ஜேக்கப்பால் தப்பி ஓடினாா். நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை கும்பல் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் முன் முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிஓடிவிட்டது.

லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீஸாா் ஜேக்கப் பாலை மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com