காவல் நிலையம் முன்பு வெட்டப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: கொலை வழக்கு பதிவு

காவல்நிலையம் முன்பு வெட்டப்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் இறந்தாா். இதையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
Published on

காவல்நிலையம் முன்பு வெட்டப்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை இறந்தாா். இதையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

புதுவை லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சோ்ந்தவா் ஜேக்கப் பால் (23). லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் எதிரே உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை சென்றாா். அப்போது அவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று வெட்டியது.

இதில் காயமடைந்த அவா்அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் சனிக்கிழமை இறந்தாா். இதையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் மேட்டுப்பாளையம் சண்முகபுரத்தைச் சோ்ந்த பச்சையப்பன் (22) முகிலன் (21), வெற்றிவேல் மற்றும் சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 3 செல்போன், 2 வாகனங்கள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய 4 வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 போ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 2 சிறுவா்கள் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனா். மேலும், இந்த வழக்கில் 2 பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com