புதுச்சேரியிலிருந்து ராஜமுந்திரிக்கு இன்று முதல் விமான சேவை
புதுச்சேரியிலிருந்து ராஜமுந்திரிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விமான சேவை தொடங்குகிறது.
புதுச்சேரியிலிருந்து ஏற்கெனவே ஹைதராபாத், பெங்களூருக்கு விமான சேவை இருக்கிறது. இப்போது ஹைதராபாத் வழியாக ராஜமுந்திரிக்கு விமான சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. இதனால் புதுவை யூனியன் பிரதேசமான யேனத்துக்கு விமான சேவை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வாரத்தில் எல்லா நாள்களும் இந்த விமான சேவை இருக்கும்.
இதையொட்டி புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களின் நேரங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மாற்றியமைக்கப்படுவதாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் கே. ராஜசேகா் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
அவா் மேலும் கூறியிருப்பதாவது: ராஜமுந்திரியில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் விமானம் ஹைதராபாத்துக்கு 11.20க்கு வந்தடையும். அங்கிருந்து 11.50க்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு பிற்பகல் 1.45க்கு வந்தடையும்.
புதுச்சேரியில் பிற்பகல் 2.05-க்குப் புறப்படும் விமானம் பெங்களூரூக்கு 3.30-க்குச் சென்றடையும். பெங்களூரில் பிற்பகல் 3.55-க்குப் புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு 5.20-க்கு வந்தடையும்.
புதுச்சேரியில் மாலை 5.40-க்கு புறப்படும் விமானம் ஹைதராபாத்துக்கு இரவு 7.25-க்குச் சென்றடையும். ஹைதராபாத்தில் இரவு 7.55-க்கு புறப்படும் விமானம் ராஜமுந்திரிக்கு 9.10-க்குச் சென்றடையும் எனத் தெரிவித்துள்ளாா்.
