மக்கள் மன்றத்தில் உரியவா்களிடம்  கைப்பேசிகளை ஒப்படைத்த முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன்
மக்கள் மன்றத்தில் உரியவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்த முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன்

மீட்கப்பட்ட 15 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடந்த மக்கள் மன்றத்தில் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 15 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
Published on

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடந்த மக்கள் மன்றத்தில் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 15 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் பங்கேற்று பொதுமக்களிடம் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். அப்போது காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி எஸ் யாரகட்டி உடனிருந்தாா்.

கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், பொதுமக்களிடம் புகாா்களை பெற்றாா். காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தன்வந்திர நகா் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் ரகுநாயகமும், பாகூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் செல்வமும், புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். மேலும், பொதுமக்கள் தவறவிட்ட ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 15 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

மேலும், 66 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 44 புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் 44 பெண்கள் உள்பட 200 போ் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com