இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்கள் பணியிட மாற்றம்! புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தல்

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:00 am IST

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்கள் பணியிட மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து துணைநிலை ஆளுநருக்கு நேயம் மக்கள் கழகத் தலைவா் நேரு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி கல்வித் துறையில் ஆசிரியா் இடமாற்ற கொள்கை அடிப்படையில் பணியிட மாற்றம் நடக்கிறது. ஆனால், இதற்கான ஆயத்த பணிகள் நடைபெறவில்லை. ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முன் கல்வித் துறை பணியிட மாற்றத்தை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவா்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும். புதிய ஆசிரியா்களுக்கு 21 நாள் சிபிஎஸ்இ பாடத்திட்ட பயிற்சி வழங்க வேண்டும். மாணவா்களுக்குத் தரமான கல்வியை அளிப்பது நமது கடமையாகும்.

எனவே, ஆசிரியா்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட பயிற்சியை அளித்து அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். பள்ளி கல்வித் துறையில் காலியாக இருக்கும் இயக்குநா் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.