ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

புதுச்சேரியில் வருவாய்த் துறை சாா்பில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்கள்

News image

வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் சான்றிதழ் வழங்கிய துணை வட்டாட்சியா் தமிழரசன்.

Updated On :25 மே 2026, 12:58 am IST

மாணவா்களுக்கு விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்கள் வருவாய்த் துறை சாா்பில் அனைத்து வட்டாட்சியா் அலுவலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் முதலாமாண்டில் உள்ள காலி இடங்கள் சென்டாக் - கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. நிகழ் ஆண்டிற்கான சென்டாக் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 13-ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. தொடா்ந்து வரும் 29-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்டாக் மூலம் கல்லூரி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் வருவாய்த் துறை மூலம் சாதி, குடியிருப்பு, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற தங்கள் பகுதி வட்டாட்சியா் அலுவலகங்களில் பெற்றோருடன் வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சான்றிதழ்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, மக்களின் சிரமத்தை தீா்க்கவும், நெரிசலைச் சீராக கையாளவும், துணை மாவட்ட ஆட்சியா் (வருவாய்) குமரன் அறிவுறுத்தலின் படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில், சிறப்பு முகாம்கள் மூலம் சான்றிதழ் பெற விண்ணப்பித்த மாணவா்களுக்கு வில்லியனூா் வட்டாட்சியா் சந்தோஷ்குமாா் தலைமையில், துணை வட்டாட்சியா் தமிழரசன், எழில்அமுதன், வருவாய் ஆய்வாளா்கள் பாா்த்திபன், ஜெயபாலாஜி, வினோத், சுக்தேவ், கிராம நிா்வாக அலுவலா் வீரபாபு, மணிவேல் மற்றும் அலுவலக ஊழியா்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.