விழுப்புரத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுடன் கோட்டாட்சியர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்துக்கு விழுப்புரம் கோட்டாட்சியர் அனுசுயாதேவி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்தும், அது செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் இத் திட்டத்தின் சரியான பயணிகளை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் வட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சார்-ஆட்சியர் முனைவர் சுபோத்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்துவது குறித்து வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வட்டாட்சியர் எஸ்.மாணிக்கம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கோ.விஜயா, சார்-ஆட்சியர் நேர்முக உதவியாளர் காமாசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.