திண்டிவனம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கல்

திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அடமானக் கடனாக 15 பேருக்கு ரூ. 26 லட்சத்து 50 ஆயிரமும், மகளிர் சிறுவணிகக் கடனாக 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும், மாற்றுத் திறனாளிகள் மூன்று பேருக்கு தலா 10 ஆயிரமும் கடனாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், உதவிமேலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் தலைவர் கே.சேகர் தலைமை வகித்து பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்கினார்.

துணைத் தலைவர் சுதந்திராதேவி, இயக்குநர்கள், பூலோகம்.கணேசன், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com