தியாகதுருகம் பேரூராட்சிக்கு கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் சென்னையில் இருந்தவாறு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். ரூ.47 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த பேரூராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை கூடிய பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
க.அழகுவேலு பாபு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (பொறுப்பு) தி.ஜீஜாபாய், பேரூராட்சிகள், அலுவலக உதவி இயக்குநர் கி.ஜெயராமன், பேரூராட்சி மன்றத் தலைவர் விஜயராஜி, துணைத் தலைவர் கன்னியம்மாள் கணேசன், செயல் அலுவலர் மா.தமிழ்ச்செல்வன் வார்டு கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சு.சரவணன், ர.பாத்திமா பீவி, கு.பார்வதி, கோ.பழனியம்மாள் ப.சந்திரபாபு, மு.ஜெகதீஸ்வரி, சீனு.நரசிம்மன், தே.ராஜாராம், க.பிரதிப்குமார், க.சுப்பிரமணியன், சூ.சக்திவேல், ச.சரவணன், மா.சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வைத்தியலிங்கம், மாவட்ட கவுன்சிலர் வி.அய்யப்பா மற்றும் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.