திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜூன் 26 உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வட்டாட்சியர் அலுவலகம் அருகே இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அச் சங்கத்தின் திண்டிவனம் பகுதி குழுத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன்,பொருளாளர் தமிழ்வாணன்,மயிலம் ஒன்றியச் செயலர் வாசு,சிபிஎம் மாவட்டச் செயலர் ஏழுமலை,வட்டக்குழு சார்பில் முனியாண்டி உள்பட பலர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.