சுடச்சுட

  

  லோக் சத்தா கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு சேவை பெறும் உரிமை சட்டம் குறித்து பைக்கில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

   அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரன், மாநில இளைஞர் அணி செயலர் ஜெய்கணேஷ் ஆகியோர் பைக்கில் பிரசாரம் செய்து வருகின்றனர்.  இந்த பிரசாரம் திங்கள்கிழமை விழுப்புரத்தை வந்தடைந்தது.

   மனு அளித்த 30 நாள்களில் ரேஷன் கார்டு, 15 நாள்களில் தண்ணீர் இணைப்பு, 3 நாள்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஒரு நாளில் முதல் தகவல் அறிக்கை ஆகியவை அளிக்க வேண்டும் என இவர்கள் பிரசாரத்தின் போது வலியுறுத்தினர்.  மேலும் இது குறித்த துண்டறிக்கைகளையும் வழங்கினர். இவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai