Enable Javscript for better performance
அமைதிக் கூட்டம்: அத்தியூர்திருக்கை  மக்களின் பாதயாத்திரை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமைதிக் கூட்டம்: அத்தியூர்திருக்கை  மக்களின் பாதயாத்திரை ஒத்திவைப்பு

    By  விழுப்புரம்  |   Published on : 27th March 2014 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமைதிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால் விக்கிரவாண்டி வட்டம், அத்தியூர்திருக்கை மக்கள் நடந்த இருந்த பாதயாத்திரை, தெருமுனைப் பிரசாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
     விக்கிரவாண்டி வட்டம் அத்தியூர்திருக்கையில் கடந்த 2012ஆம் ஆண்டு கொலையான முனுசாமி என்பவரது வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த கோரியும், உயர் மட்ட குழு விசாரணை கோரியும், விழுப்புரம் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் சம்மேளனம் சார்பில் அத்தியூர் திருக்கையிலிருந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பாதயாத்திரை மற்றும் தெருமுனை பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
     இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்கு பிறகு இப்பிரச்னை குறித்து அமைதிக் கூட்டம் நடத்துவதாக வட்டாட்சியர் பாஸ்கரன் தெரிவித்தார்.
     இதையடுத்து பாதயாத்திரை தெருமுனைப் பிரசாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
     இக் கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் பாஸ்கரதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்அதிபன் மற்றும் இருதரப்பு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai