Enable Javscript for better performance
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில்  அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில்  அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    By  உளுந்தூர்பேட்டை,  |   Published on : 27th March 2014 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். காட்டு எடையர் காலனியில் தொடங்கி கா.பாளையம், கொம்மசமுத்திரம், காட்டுச்செல்லூர், பல்லவாடி, தானம், மைலாடும்தாங்கல், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.
     சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்ற இந்த வாக்குசேகரிப்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.பழனிவேல், ஒன்றியக்குழுத் தலைவர் கே.பாலு, துணைத்தலைவர் இரா.சாய்ராம், மாவட்ட துணை செயலாளர் எம்.பரமாத்மா, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.இராமசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜி.குணசேகரன், நகர செயலாளர் எஸ்.துரை, நகர துணை செயலாளர் கஜேந்திரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai