Enable Javscript for better performance
தென்பாலையில் நமோ பேரவை துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி வட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், தென்பாலை கிராமத்தில் நமோ பேரவை துவக்க விழா மற்றும் பாஜக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
     தென்பாலை கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு என்.சந்திரபாபு தலைமை வகித்தார். எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாஜக மாவட்ட பிரசார அணி பசுமலை பேசினார். ஒன்றியப் பொருளாளர் ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒன்றிய அமைப்பாளர் பச்சையப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேல்அருங்குணம், மேல்புதுப்பட்டு, பெருவளூர் ஆகிய கிராமங்களில் பாஜக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பாஜகவில் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai