Enable Javscript for better performance
தேசிய ஜனநாயக கூட்டணி  தேர்தல் அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை செஞ்சி திருவண்ணாமலை சாலையில் நடைபெற்றது.
     ஆரணி நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
     இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட தேமுதிக பொருளாளர் செஞ்சி சிவா, மதிமுக மாவட்டச் செயலர் ஏ.கே.மணி, பாஜக மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாவட்டச் செயலர் நெடி.சுப்பிரமணி வரவேற்றார். பாமக மாநில பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     இந்நிகழ்ச்சியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியதாவது: கிராமங்கள் தோறும் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளோடு வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
     இந்நிகழ்ச்சியில் தேமுதிக ஒன்றியச் செயலர் இல.தயாநிதி, செஞ்சி நகரச் செயலர் ஆனந்தன், மதிமுக செஞ்சி நகரச் செயலர் சண்முகம், பாமக ஒன்றியச் செயலர் ஐய்யனார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai